உணவுப் பொருட்கள் கையிருப்புநிர்ணயித்ததை விட கூடுதலாக இருந்தால் பறிமுதல்: திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

Thursday, 07 January 2010 06:45 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமலர் 07.01.2010

உணவுப் பொருட்கள் கையிருப்புநிர்ணயித்ததை விட கூடுதலாக இருந்தால் பறிமுதல்: திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி: ""திருச்சி மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லரை வணிகர்கள் அரசு அனுமதிக்கப்பட்ட அளவுகளில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும்,'' என்று கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறியதாவது: திருச்சி மாவட்டத்திலுள்ள சில்லரை மற்றும் மொத்த வணிகர்கள் பல்வேறு கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகளே அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு வகை, எண்ணெய் வகை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் சர்க்கரை ஆகியவை இருப்பு வைக்க வண்டும். அரிசி ஆலை நடத்தும் மொத்த வணிகர்கள் மூவாயிரம் குவிண்டால் அரிசியும், அரிசி ஆலை நடத்தாத வணிகர்களும், அரிசி ஆலை மட்டும் வைத்திருப்பவர்கள் தலா ஆயிரம் குவிண்டால், சில்லரை அரிசி வணிகர்கள் 200 குவிண்டால், அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம். மாநகராட்சி பகுதியிலுள்ள மொத்த வணிகர்கள் ஆயிரம் குவிண்டால் கோதுமையும், சில்லரை வணிகர்கள் 31.25 குவிண்டால், மாவட்ட தலைநகரத்தில் மொத்த வணிகர்கள் 750 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 18.25 குவிண்டால், இதர பகுதியிலுள்ள மொத்த வணிகர்கள் 437.50 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 12.50 குவிண்டால் அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம்.

மாநகராட்சிப் பகுதியிலுள்ள பருப்பு மொத்த வணிகர்கள் இரண்டாயிரத்து 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 62.50 குவிண்டால், மாவட்டதலைநகரில் மொத்த வணிகர்கள் ஆயிரத்து 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டால், இதர பகுதியிலுள்ள மொத்த வணிர்கள் ஆயிரத்து 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டாலும் அதிகபட்சம் இருப்பு வைக்கலாம். உணவு எண்ணெய் மொத்த வணிகர்கள் "' கிரேடு நகரத்தில் 600 குவிண்டால் எண்ணையும், சில்லரை வணிகர்கள் 20 குவிண்டால், "பி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் 400 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 12 குவிண்டால், "சி' கிரேடு நகரத்திலுள்ள வணிகர்கள் 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் எட்டு குவிண்டால் அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம். எண்ணெய் வித்து "' கிரேடு நகர மொத்த வணிகர்கள் ஆயிரத்து 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் நூறு குவிண்டால், "பி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் ஆயிரம் குவிண்டால், சிறுவணிகர்கள் 75 குவிண்டால், "சி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டால் அதிகபட்சம் இருப்பு வைக்கலாம்.அனைத்து வணிகர்களும் சர்க்கரை அதிகபட்ச அளவு இருப்பாக இரண்டாயிரம் குவிண்டால் வரை இருப்பு வைக்கலாம். டி.ஆர்.., தலைமையில் நடத்தப்பட்ட வணிகர்கள் கூட்டத்தில் அரசு நிர்ணயித்த அளவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக இருப்பு இருந்தால் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:46