மேலூர் உழவர் சந்தைக்கு மாற்று இடம் தேர்வு

Tuesday, 22 December 2009 09:46 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினகரன் 22.12.2009

மேலூர் உழவர் சந்தைக்கு மாற்று இடம் தேர்வு

மேலூர்: மேலூர் சந்தைப்பேட் டை பகுதியில் கடந்த 2005ல் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இங்கு 48 கடைகள் இயங்கின. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உழவர் சந்தை அமைந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே இதனை மாற்றிடத்தில் செயல்படுத்த மத்திய அமைச்சர் மு..அழகிரியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரது பரிந்துரையின் பேரில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தையை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சேனல் ரோடு பகுதியில் 4 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது.இந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மதிவாணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேளாண் உதவி இயக்குநர் சிதம்பரம், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு இயக்குநர் முக மது இபுரா கிம் சேட், தாசில் தார் சுப்பு, நகராட்சி ஆணை யர் (பொறுப்பு) கார்த்திகேயன், கவுன்சிலர் மதிவா ணன் ஆகி யோர் பார்வையிட்டனர். இங்கு கிட்டங்கி அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 22 December 2009 09:59