நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்

Monday, 08 September 2014 09:00 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினகரன்      08.09.2014

நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்


கோவை, : கோவையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்புறங்களில் வாழும் மக்கள் தமக்கு தேவையான காய்கறிகளை தாமே பயிரிட்டு கொள்ள தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டம் தற்போது கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. காய்கறிகளை எளிய முறையில் வீட்டின் மேல் வளர்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ1,352க்கு தோட்டக்கலை துறையால் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க 16 ச.மீ இடம் போதுமானது. ஒவ்வொரு பயனாளிகளும் 5 தளைகள் வரை அதிகபட்சமாக பெறமுடியும்.

இத்திட்டத்தின் தனி சிறப்பாக பத்து வகையான காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலிதீன் பைகள் வழங்கப்படவுள்ளது. இவை எடை குறைவாகவும் மற்றும் கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலிதீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் இருக்க தடுக்கிறது.

நீரில் எளிதாக கரையும் உரங்களை பயன்படுத்துவதால் செடிகள் செழிப்பாக வளரும். இயற்கை முறையிலான பூச்சிகொல்லி மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துவதால் நஞ்சற்ற காய்கறிகளை விளைவிக்கலாம். இவைகளுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாலி, மண் அள்ளும் கருவி, மண்கிளரும் கருவி ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கோவை நகரில் தோட்டக்கலை துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டம் துவங்க ஆர்வமுள்ள சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, போத்தனூர், சூலூர் பகுதியினர் 99655-62700, 97864-86143. சர்க்கார் சாமக்குளம், காளப்பட்டி, சரவணம்பட்டி, காந்திபுரம்,  கணபதி பகுதியினர் 95784-52676, 97875-55692. ஆர்.எஸ்.புரம், பி.என்.புதூர், ராமநாதபுரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியினர் 97919-98833, 96598-52087.

சாய்பாபா காலனி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டர் மில், துடியலூர் பகுதியினர் 95245-89749, 94888-36480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 08 September 2014 09:41