நெல், மிளகாய் விவசாயிகளுக்கு வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம்

Monday, 20 September 2010 10:42 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 20.09.2010

நெல், மிளகாய் விவசாயிகளுக்கு வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம்

சிவகங்கை, செப்.19: நெல், மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் சி.அன்பரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தெரிவித்திருப்பது: மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் விவசாயிகளின் நலனுக்காக மழை காப்பீடு திட்டத்தினை தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், 2010 சம்பா நெல் மற்றும் மிளகாய் பயிருக்கு அமல்படுத்துகின்றது.

இத்திட்டம், பருவகால மழையின் மாற்றங்களை அனுசரித்து, விவசாயிகளின் குறைவான விளைச்சல் இழப்பீட்டினை காப்பீடு மூலம் ஈடு செய்யும். அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், மத்திய அரசால் 20-1-2002- ம் ஆண்டு வேளாண் காப்பீட்டுத் திட்டங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இதுவரை இந்நிறுவனம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ 1,124 கோடி தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு அளித்துள்ளது. 2009-ல் நெற்பயிருக்கு சுமார் 6500 விவசாயிகளுக்கு ரூ 2.5 கோடி இத்திட்டத்தின் மூலம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையானது பயிர் செய்யும் செலவீனத்தை பொருத்து ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் காப்பீடு செய்துள்ள விவசாயிகளும் நஷ்டஈடு காப்பீடு பெறும் தகுதி உடையவராவர். காப்பீடுக் காலம் முடிவடைந்த சில நாள்களுக்குள், காசோலையாகவோ அல்லது விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கவோ ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காப்பீடு நிறுவனத்தின் முகவர் மூலம் வரையோலையாக (ஈஈ) பிரிமீயம் செலுத்தலாம். ரொக்கமாக பிரிமீயத்தினை எந்த நபரிடமும் செலுத்தினால் கம்பெனி பொறுப்பேற்காது.

இத்திட்டத்தில் சேர விவசாயிகள், தங்களது பெயரிலேயே சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம். பிரிமீயத் தொகையை வரைவோலை மூலம் அனுப்ப வேண்டிய முகவரி ஈஈ ஐசஊஅயஞமத ஞஊ அஐஇ ஞஊ ஐசஈஐஅ கபஈ அலஐந ஆஅசஓ அஇ. சஞ. 00601020001827 (ல்ஹஹ்ஹக்ஷப்ங் ஹற் இட்ங்ய்ய்ஹண்).

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் சேவைவரி 10.30 உள்பட ரூபாய் ஒரு ஏக்கருக்கு. எஸ்.புதூர் வட்டாரம் நெல்லுக்கு 585, மிளகாய்க்கு ரூ 717. திருப்பத்தூர், கன்னங்குடி, தேவகோட்டை, சாக்கோட்டை ஆகிய வட்டாரம் நெல்லுக்கு ரூ441. சிங்கம்புணரி வட்டாரம் நெல்லுக்கு ரூ 640. சிவகங்கை வட்டாரம் நெல்லுக்கு ரூ518. திருப்புவனம் வட்டாரம் நெல்லுக்கு ரூ 474, மிளகாய்க்கு ரூ 882. காளையார்கோவில், கல்லல் ஆகிய வட்டாரம் நெல்லுக்கு ரூ 540, மிளகாய்க்கு ரூ 772. மானாமதுரை வட்டாரம் நெல்லுக்கு ரூ 485. இளையான்குடி வட்டாரம் நெல்லுக்கு ரூ441, மிளகாய்க்கு ரூ 662. மொத்த காப்பீடு மதிப்பு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ 6,000, மிளகாய்க்கு ரூ10,000. விவசாயிகள் பிரிமீயம் கட்ட கடைசி நாள் 25-9-2010.