திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

Tuesday, 07 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்           07.01.2014

திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தி அந்த நிறுவனங்களில் இருந்து கழிவுகளை சேகரிக்கவும், அதனால் மாநகராட்சிக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைத்திடும் வகையில் நிர்வாக கட்ட ணம் நிர்ணயிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓட்டல்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், பழக்கடைகளுக்கு சேவை கட்ட ணம் மட்டுமே குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு நிர்வாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நிர்வாக கட்டணமாக பேக்கரிக்கு 300 ரூபாயும், டீக்கடை மற்றும் பேக்கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிபன் ஸ்டால்களுக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், மெஸ்களுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், உணவு விடுதிகளுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளுக்கு 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், பெரிய காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய காய்கறி கடைகள், பழக்கடைகளுக்கு 500 ரூபாயும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய மளிகை கடைகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஹார்டுவேர் சிறிய கடைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 750 ரூபாயும் நிர்வாக கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாக கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.