பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

Thursday, 21 November 2013 09:59 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்          21.11.2013  

பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

திருவொற்றியூர், : பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார்.

தலா 500 பேர் வீதம் 3 குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3  பேருக்கு அரை கிராம் தங்க நாணயம், 12 பேருக்கு கைக்கடிகாரம் ஆகியவற்றை மண்டல உதவி ஆணையர் காங்கேயன் கென்னடி வழங்கினார். மண்டல அதிகாரிகள் காளிமுத்து, விஜயராகவன், கவுன்சிலர்கள் சூரியபாபு, அமுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.