பள்ளிகொண்டா பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை கூட்டம்

Friday, 08 November 2013 05:36 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினத்தந்தி            08.11.2013

பள்ளிகொண்டா பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை கூட்டம்

பள்ளிகொண்டா தேர்வுநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பி.ஜி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதற்கு ஏற்றாற்போல் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான துணை விதிகள் மற்றும் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயம் செய்வது, விதிகளை மீறுபவர்கள் மீது அபராத கட்டணம் வசூலித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி அலுவலர் முரளி நன்றி கூறினார்.