சென்னை மாநகர் கட்டமைப்புக்கு 5 ஆண்டுகளில் ரூ.294 கோடி ஒதுக்கீடு: மேயர் சைதை துரைசாமி

Sunday, 31 July 2016 07:57 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமணி     31.07.2016 

சென்னை மாநகர் கட்டமைப்புக்கு 5 ஆண்டுகளில் ரூ.294 கோடி ஒதுக்கீடு: மேயர் சைதை துரைசாமி

 சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.294.28 கோடி ரூபாய் ஒதுக்கி செய்யப்பட்டு 71 பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

சென்னை ரிப்பன் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் திமுக மேயர் பொறுப்பில் இருந்த காலங்களில் பல பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும். ஆனால், அதிமுக காலத்தில் பணிகள் ஏதும் நடக்காதது போலவும் திமுகினர் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில்  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  கால்வாய்களின் குறுக்கேவும் ரயில்வே கிராஸிங்குகளை கடப்பதற்கும் பல்வேறு பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. 

2006  முதல் 2011 வரை மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட 46 பணிகளில்,  22 அறிவிப்புகளில் இடம்பெற்ற பணிகள் கைவிடப்பட்டது. 9 அறிவிப்பில் இடம்பெற்ற பணிகள்  முடிக்கப்படவில்லை.  

மொத்தம் 15 பணிகள்  மட்டுமே முடிக்கப்பட்டது. 

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 37 பாலப்பணிகள் ரூ.114.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

இப்போது 21 பாலப் பணிகள் ரூ. 21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

அவை ரூ.10.03 கோடி மதிப்பீட்டில் கோடம்பாக்கம் மேம்பாலத்தினை பழுது பார்த்து மேம்படுத்தும் பணியில் முக்கிய பணிகள் முடிவுற்று, நடைபாதை, படிக்கட்டுகள் மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த மேம்பாலம்: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் அனைத்தும் குறுகிய கால திட்டமிட்டதின் பலனாக தனித்தனி சந்திப்புகளில் தனித்தனி பாலங்கள் கட்டப்பட்டது. உதாரணமாக எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரத்தில் அமைத்த மேம்பாலத்தை ஒருங்கிணைத்து அண்ணாசாலை முதல் மகாலிங்கபுரம் வரை ஒரே மேம்பாலமாக திட்டமிட்டு கட்டியிருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்.

இதேபோல சர்தார் பட்டேல் சாலை மேம்பாலத்தையும் ஒருங்கிணைத்து ஐ.ஐ.டி. முதல் மத்திய கைலாஷ் கடந்து ராஜீவ்காந்தி சாலையையும் மற்றும் அடையாறு மேம்பாலத்தையும் இணைத்து திட்டமிட்டு கட்டியிருந்தால் இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகியிருக்கும்.

புதிய திட்டம்: அண்ணா சாலையில் இருந்து மகாலிங்கபுரம் வழியாக லயோலா கல்லூரி வரை பயணிக்கும் ஒருவர் தங்கு தடையின்றி செல்லவும்  ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை தடையற்ற போக்குவரத்திற்கும் என பல சந்திப்புகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த மேம்பாலம் திட்டமிடப்பட்டு வருகிறது.முக நிர்வாகத்தால் ஆய்வு செய்து 2007 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட பணியினை  புணரமைக்கப்பட்டு கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண் 1 இல் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானத்திற்கான மதிப்பீடு ரூ. 24.90 கோடிக்கு தயாராக உள்ளது. சேவைத்துறைகளான சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறையின் தளவாடங்களை மாற்றியமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை மற்றும் பாலத்திற்கு தேவையான ஐ.சி.எஃப். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் குறித்து உறுதி செய்யப்பட்ட பின்னர் முழுமையான மதிப்பீடு தயாரித்து விரைவில் ஒப்பங்கள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

மாநகராட்சி 5 ஆண்டுகளில்: செப்டம்பர் 2011 முதல்  ஜீலை 2016 வரை அதாவது 58 294.28 கோடி மதிப்பீட்டில்  மொத்தம் 71 பாலப்பணிகள் (5 பெரிய பாலங்கள், 3 சுரங்கப்பாதைகள் உட்பட) எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 114.95 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகளும்  முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 21 பாலப்பணிகள் ரூ.21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 13 பாலப்பணிகள் ரூ.158.14 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படவுள்ளன என பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் சைதை துரைசாமி.