புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே

Friday, 31 January 2014 11:35 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினமலர்                30.01.2014

புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே

பெரியகுளம்: பெரியகுளத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு சர்வே செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, கவுன்சில் கூட்டத்தில் தலைவர் அறிவித்தார்.

பெரியகுளம் நகராட்சி கூட்டம், தலைவர் ஓ.ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் மகேஸ்வரி, துணைத்தலைவர் முகுந்தன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நடந்த விவாதம்.

சம்சுதீன்: நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. தலைவர்: அழகர்சாமிபுரம் பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் கட்டப்பட்டுள்ளன. மின்துறை நிர்வாகம் அதற்கு எப்படி இணைப்பு வழங்கியது, என தெரியவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்பு இடத்தை கையகப்படுத்த வேண்டும். மேலும் நகராட்சிக்கு இடங்கள் எங்கெங்கு உள்ளது, என்ற விபரத்தை சர்வேயர் உதவியுடன் கமிஷனர் தெரிவிக்க வேண்டும்.

கமிஷனர்: விரைவில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.தலைவர்: பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை எதிர்புறம், சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு காலனி பகுதியில் 6 ஏக்கர் இடம் உள்ளது. அப்பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு, புதிதாக பஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய பஸ்ஸ்டாண்ட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்படும்.

சக்திவேல்: 29 வது வார்டில் போதுமான தெருக்குழாய் வசதி இல்லை.தலைவர்: அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சந்திரன்: 28 வது வார்டில் துப்புரவு பணி மந்த நிலையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.