'குடிநீர்த் தொட்டிகளை குளோரின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்'

Sunday, 19 July 2009 00:00 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி 20.07.2009

'குடிநீர்த் தொட்டிகளை குளோரின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்'

தஞ்சாவூர், ஜூலை 18: தண்ணீர்த் தொட்டிகளில் நீரேற்றும் ஒவ்வொரு முறையும் குளோரின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:

கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுமக்களுக்கும் பள்ளிகள், கல்லூரிகள், சத்துணவுக் கூடங்கள், சுகாதார மையங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க மின்சராத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டத் துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர்க் குழாய்கள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும், ஆழ்குழாய் கிணறுகள் பழுதடையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் சண்முகம்.

Last Updated on Monday, 20 July 2009 09:47