ரூ.13.53 கோடி செலவில் தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம்; நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது

Wednesday, 15 July 2009 11:44 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

மாலை மலர் 15.07.2009

ரூ.13.53 கோடி செலவில் தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம்; நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறுகிறது

சென்னை, ஜூலை. 15-

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில், காலரா போன்ற தொற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு இங்கு தான் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

தண்டையார்பேட்டையில் உள்ள இந்த தொற்று நோய் ஆஸ்பத்திரியை சீரமைத்து நவீன மயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் உருவாகும் தண்டையார் பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு ரூ.13.53 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இது 221 படுக்கை வசதிக கொண்டதாக இருக்கும் நவீன கருவிகள் மற்றும் ஆம்புலன்சு வண்டிகள் ரூ.1.25 கோடி செலவில் வாங்கப்படுகிறது.

முதல் கட்டமாக 2 பழைய கட்டிடங்கள் இடித்து கட்டப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்குகிறது. மொத்தம் 8.2 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆஸ்பத்திரி அமையும். இதில் நவீன ஆய்வு கூடம், பிரமாண்டமான ஆவண அறை, காட்சி கூடம், கூட்ட அரங்கு, சிறிய ஆலோசனை கூடம், நர்ஸ் பயிற்சி பெறு பவர்களுக்கான வகுப்பறை, சிறப்பு வார்டு ஆகியவை அமைந்திருக்கும்.

நிர்வாக கட்டிடத்தின் பரப்பளவு 5,896 சதுர மீட் டர். நோயாளிகள் சிகிச்சை பெறும் மற்ற இரண்டு கட்டிடங்கள் ஒவ்வொன்றும் 1252.53 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கி உள்ளது. முதற்கட்ட பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ரூ.8 கோடி அனுமதித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 15 July 2009 11:48