திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

Thursday, 30 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினகரன்                30.01.2014

திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இதில் நகர்ப்புறத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் அதிகளவ் விபத்துகள் நடந்து வந்தது. கடந்த வாரம் வெறிநாய் கூட்டம் சுமார் 20 பேரை கடித்து குதறியது. இதனால் திருக்கோவிலூர் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்திரவின் பேரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்ய சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நேற்று முதல் கட்டமாக திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 25 நாய்களை கண்டறிந்து அவைகளுக்கு கால்நடை மருத்துவர் களால் கருத் தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன், துணைத்தலைவர் குணா, செயல்அலுவலர் சுந்தரம்,  மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுப்பு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கால்நடைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.