"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

Wednesday, 29 January 2014 11:28 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி           29.01.2014 

"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

கோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சிக் கலையரங்கில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மருத்துவக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள்வது குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்க தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

 மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.