ராஜீவ் வீட்டு வசதித் திட்டம்:மேயர் தலைமையில் ஆலோசனை

Friday, 28 June 2013 09:21 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி                28.06.2013

ராஜீவ் வீட்டு வசதித் திட்டம்:மேயர் தலைமையில் ஆலோசனை

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் ராஜீவ் வீóட்டு வசதித் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் ஆர். சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் திட்டம் குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சண்முகசுந்தரம் பேசியது:

  நிதியமைச்சரைத் தலைவராகவும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிóத் துறை அமைச்சரைத் துணைத் தலைவராகவும் கொண்டு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தேசிய அளவிலான வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்புக் குழுவினரால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  இதில் மாநில அரசு மானியம் 40 சதவிகிதம், மத்திய அரசு மானியம் 50 சதவிகிதம், பயனாளியின் பங்குத் தொகை 10 சதவிகிதம். ஆட்சேபகரமற்ற அரசு நிலங்களில் ஒழுங்கற்ற, நெருக்கமான அமைந்துள்ள குடிசைப் பகுதிகளை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றப்படும். ஆட்சேபகரமான நிலங்களில் வசித்து வரும் குடிசைப் பகுதிகளில் அதன் அருகில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். தெருவிளக்கு, சாலை வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ வசதியுடன் இந்தக் குடியிருப்புகள் அமைக்கப்படும்.

  இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளிலும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து நகரப் பகுதிகளிலும் குடிசையில்லா நகராக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் சண்முகசுந்தரம்.

  கூட்டத்தில், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், எம். லதா,  ராஜீவ் வீட்டு வசதித் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் கே. ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.