மகாலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Thursday, 01 August 2013 07:41 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினகரன்              01.08.2013

மகாலட்சுமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி 15வது வார்டு மகாலட்சுமி நகரையும், அண்ணாநகரையும் இணைக்கும் வீதி சந்திப்பில், உள்ள இடத்தில் காளியப்பன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கட்டட ஆக்கிரமிப்பை அகற்றவும், அந்த பகுதி பொது மக்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர்  வருவாய்த்துறையினர் மேற்பார்வையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று, 15வேலம்பாளையம் போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் இறங்கினர். இதையடுத்து, அந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என்றும்,  அந்த இடத்திற்கான பட்டா , என்னிடம் உள்ளது என்றும், எனவே ஆகிக்கிரமிப்பை அகற்றக்கூடாது என்றும் கூறி, திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில்  நேற்று மதியம் முதல் தனது மகன், மனைவி, மருமகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு காளீயப்பன் தரையில் அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

இதனால் முதலாவது மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி மண்டல  உதவி ஆணையாலர் ஷபியுல்லா பேசுகையில், இரண்டு நாட்களில் அந்த இடத்தை அளவீடு செய்து, உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இந்த நிலையில்,  அரசு பணிகளைச் செய்வதை, காளியப்பன் தடுத்ததாக, மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் 15-வேலம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், காளியப்பனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினார்.