வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.10 கோடி நிதி வழங்கல்

Thursday, 30 August 2012 09:52 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர்            30.08.2012

வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.10 கோடி நிதி வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புது வாழ்வு திட்டம் மூலம், 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு, இரண்டு கோடியே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், சூளகிரி மற்றும் தளி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள, 178 கிராம பஞ்சாயத்துக்களில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பணிகளை மக்கள் அமைப்புகளை கொண்டு செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புது வாழ்வு திட்டத்துக்கு, 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புது வாழ்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களை உறுப்பினராக கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எனும் அமைப்பு பஞ்சாயத்து தலைவரை தலைவராக கொண்டு அமைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான நிதி, இரண்டு கோடியே 10 லட்ச ரூபாயை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார். புது வாழ்வு திட்டத்தின் அனைத்து பணிகளும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்த பட்சம் ஆறு லட்ச ரூபாய் முதல் அதிக பட்சம் 25 லட்ச ரூபாய் வரை விடுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வாழ்வாதார நிதி வழங்கப்படுகிறது.
Last Updated on Thursday, 30 August 2012 09:52