வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்: வீட்டு வசதி வாரியம் ஏற்பாடு

Friday, 19 November 2010 11:23 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி            19.11.2010

வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்: வீட்டு வசதி வாரியம் ஏற்பாடு

தேனி, நவ. 18: நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசித்துவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வீட்டு வசதி வாரியம் மூலம் வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

÷இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

÷இந்தத் திட்டத்தில் மாத வருமானம் ரூ 5 ஆயிரம் வரை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1 லட்சம், ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரையுள்ள வருவாய் பிரிவினருக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1.6 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

÷இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். கடனுக்குரிய வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதல் கடன் தேவைப்படுபவர்களுக்கு தொகைக்கு ஏற்ப சாதாரண வட்டி வசூலிக்கப்படும். ÷சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா வைத்திருப்போர், அரசு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

÷மேலும் விவரங்களுக்கு, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டு வசதிப் பிரிவு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 19 November 2010 11:24