பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி

Tuesday, 09 November 2010 05:39 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன்                    09.11.2010

பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி

சிவகங்கை, நவ. 9: பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வநாயகம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளில் சுவர்ணதாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டுகிறது. இத்திட்டத்தில் 104 பேருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.8.76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2007ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கு கல்வி தகுதி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்போது உள்ள கல்வி தகுதி அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குழுட்டத்தில் பயிற்சிக்கான நிறுவனம் மற்றும் பயிற்சிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.

பயிற்சிகளின் விவரம்: கல்வி தகுதி இல்லாத பயிற்சிகள்&தையல், செல்போன் பழுது, பிட்டர், மேசன், வயரிங், ரேடியோ மெக்கானிக், ஜே.சி.பி., மெக்கானிக். கல்வித் தகுதி உள்ள பயிற்சிகள்&நர்ஸ், கம்ப்யூட்டர். பயிற்சி தினமும் 6 மணி நேரம் வீதம் 300 மணி நேரம் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.