வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடுகட்ட பெறும் கடனுதவிக்கு ‘வட்டி மானியம்’ அளிக்க புதுதிட்டம்

Wednesday, 27 October 2010 09:41 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன்             27.10.2010

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடுகட்ட பெறும் கடனுதவிக்கு வட்டி மானியம்அளிக்க புதுதிட்டம்

மதுரை, அக். 27: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீடு கட்ட பெறும் வங்கி கடனுதவிக்கான வட்டிக்கு மானியம் அளிக்கும் புதுதிட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாத நபர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எட்டும்வகையில் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் வீடு கட்ட வட்டி மானியம் அளிக்கும்(ஐஎஸ்எச்யுபி) என்ற புதுதிட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி வாரியம் மூலம் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் 270 சதுர அடியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், 400 சதுர அடியில் வீடு கட்டுபவர்களுக்கு ரூ.1.60 லட்சமும் வட்டி மானியமாக அளிக்கப்படவுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்தால் அவர்களுக்கு கடனுதவிக்கான வட்டியில் மானியம் அளிக்கப்படும்.

குடிசை மாற்று வாரிய மதுரை மண்டல செயற்பொறியாளர் ஜெயபால் கூறியதாவது:

மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 2 ஆயிரம் வீடுகளுக்கு இத்திட்டத்தின்கீழ் கடனுதவிக்கான வட்டியில் மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமும், ஆயிரம் வீடுகளுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலமும் வட்டி மானியம் அளிக்கப்படவுள்ளது.

ரூ. ஒரு லட்சம் வட்டி மானியம் கோருபவர்கள் 20 ஆண்டுகளுக்கு மாதத் தவணையாக ரூ. 580ம், ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் வட்டி மானியம் கோருபவர் கள் 20 ஆண்டுகளுக்கு மாதத்தவணையாக ரூ. ஆயிரத்து 80ம் செலுத்த வேண்டும்.

இடத்திற்குரிய பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமானம் செய்து கொடுக்க வேண்டும். ப்ளான் அப்ரூவல், லீகல் ஒப்பீனியன், சார்பதிவாளர் அலுவலக ஸ்டாம்ப் டியூட்டி போன்றவைக்கும் இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர் களுக்கு பெரிதும் பயனளிக்கும். முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் பொட்டபாளையத்தில் 100 நபர்கள், தேனி மாவட்டம் போடியில் 208 நபர்களுக்கு வட்டிமானியம் அளிக்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, என்றார்.