வீடு கட்டினால் வட்டிக்கு மானியம்

Wednesday, 27 October 2010 05:33 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர்                 27.10.2010

வீடு கட்டினால் வட்டிக்கு மானியம்

மதுரை : வீடு கட்டினால் வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. "குடிசைகள் இல்லா தமிழகம்' எனும் கொள்கை முடிவுப்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டம் குடிசை மாற்று வாரியம் மூலம் மாநில அளவில் செயல்படுகிறது. அடுத்ததாக வீடு கட்டினால் வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 270 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட வங்கிக்கடன் ஒரு லட்சம் ரூபாய். 400 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட வங்கிக்கடன் ஒரு லட்சத்து 60 ரூபாய். இதற்காக, கனரா, ..பி., மற்றும் இந்தியன் வங்கிகளுடன், குடிசை மாற்று வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடன் தொகைக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.

ஒரு லட்சம் மற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவோருக்கு மூன்று தவணைகளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். ஒரு லட்சம் கடன் பெறுவோர் மாதம் 580 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் பெறுவோர் மாதம் 1080 ரூபாய் வீதம் 20 ஆண்டு தவணை செலுத்த வேண்டும். நிலத்திற்கான பட்டா, பத்திரம், பத்திரப்பதிவு ஆவணங்களுடன், குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டம் தோறும் 20 ஆயிரம் வீடுகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்ட வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.

Last Updated on Wednesday, 27 October 2010 05:35