நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட கடன் விண்ணப்பிக்க அழைப்பு

Tuesday, 19 October 2010 07:24 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன் 19.10.2010

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட கடன் விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, அக். 19:நகர் புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சொந்தமாக வீடு கட்ட கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர் புற பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க மானிய வட்டி யில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்டத்தில் உள்ள நகர் புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம்.

நகராட்சி மற்றும் பேரூ ராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை இருத்தல் வேண்டும். குறைந்த வருவாய் பிரிவினர் மாத வருமானம் ரூ.10 ஆயிரம் வரை இருத்தல் வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.

இக்கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண் டும். கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத்தரப்படும். கடனுக்குரிய வட்டி தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைபட்டால் கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு 25 சதுர மீட்டர் பரப்பு, குறைந்த வருமான பிரிவினர் கட்டும் வீடு குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் இருத்தல் வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலம்.

சொந்தமான நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங் களுக்கு கோவை டாடாபாத்தில் உள்ள கோவை வீட்டு வசதி பிரிவு, தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் உரிய அலுவலரை நேரில் அணுகி கடன் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.