மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: டிச.30-ல் விழா

Tuesday, 23 December 2014 12:02 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

  தினமணி       23.12.2014

மதுரையில் ஐந்தாயிரம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்:

டிச.30-ல் விழா

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5,000-ம் ஏழை பெண்களுக்கு அரசு சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் டிசம்பர் 30-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர், மாநகராட்சி சார்பில் 4,000-ம் பேருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1,000-ம் பேருக்கும், ஆக மொத்தமாக 5,000-ம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கி வாழ்த்திப் பேசுகின்றனர்.

இவ்விழாவுக்கு மேயர் விவி ராஜன்செல்லப்பா தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணை மேயர், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட சமூக நலத்துறையினர் பங்கேற்கின்றனர்.