கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மாமல்லபுரம் அருகே பணிகள் துவக்கம்

Saturday, 20 February 2010 06:29 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமலர் 20.02.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மாமல்லபுரம் அருகே பணிகள் துவக்கம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பப் பணி துவங்கியது.சென்னை நகர மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் 600 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் ஆதாரங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முக்கியமானது. ஏரியில் கொண்டு வரப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது, கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை வாரியம் செயல்படுத்துகிறது. சென்னை அடுத்த மீஞ்சூரில் தனியாருடன் வாரியம் இணைந்து ஒப்பந்த அடிப்படை யில் செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.இத்திட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்திலும் செயல்படுத்தப்படும் எனத் தமி ழக துணை முதல்வர் ஸ்டாலின் 2007ம் ஆண்டு அறிவித்தார்.இத்திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் 908.28 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்து கிறது.

இதற்காக, மத்திய அரசு 871.24 கோடி ரூபாயை முழு மானியமாக வழங்குகிறது. இதில், 300 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் என்ற பெயரில் இயங்கும் இத்திட்டத் திற்கு மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தில் ஆளவந் தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் நீண்டகால குத்தகை அடிப் படையில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் எடுத்து நவீன முறையில் சுத்திகரித்து குடிநீராக மாற்றி திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப் பட்டு, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.துணை முதல்வர் ஸ்டாலின் 2008ம் ஆண்டு மாமல்லபுரம் நாட்டிய விழாவிற்கு வந்தபோது இவ்விடத்தை பார்வையிட்டார். தற்போது, திட்டப் பணியை துவக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெம்மேலியிலிருந்து குடிநீர் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல கிழக்கு கடற் கரை சாலையோரமாக குழாய் கள் புதைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நெம்மேலியிலும் புல்டோசர் மூலம் நிலம் சமன் செய்யப்படுகிறது.வாரிய அதிகாரிகளும் முற்றுகையிட்டு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.துணை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களில் அடிக்கல் நாட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Last Updated on Saturday, 20 February 2010 06:58