கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமல்

Tuesday, 16 February 2010 05:31 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 16.02.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமல்

சென்னை, பிப். 15: தொடர்ந்து தாமதமாகி வந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மார்ச் இறுதியில் அமலுக்கு வருகிறது.

÷மார்ச் இரண்டாவது வாரத்தில் சோதனை ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
÷
கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சென்னை மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் இந்தத் திட்டத்தை, "வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், திரும்ப ஒப்படைத்தல்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னை கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் (சி.டபிள்யு.டி.எல்.) மேற்கொண்டு வருகிறது.

÷.வி.ஆர்.சி.எல். உள்கட்டமைப்பு மற்றும் திட்ட நிறுவனமும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெபசா கட்டுமான நிறுவனமும் இணைந்து "சென்னை கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம்' என்ற பெயரில் இத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.

÷ஒப்பந்தத்தின்படி, இந்த நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்கு குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் விலைக்கு வாங்கிக் கொள்ளும்.

÷2006 அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டம் தீர்மானிக்கப்பட்டு, 2007 பிப்ரவரி 25-ல் காட்டுப்பள்ளியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

÷2008 ஜூன் மாதம் இத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

÷ஆனால் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக திட்டம் தாமதமாகி வருகிறது. இதனால் இத்திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

÷இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:

÷கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு, 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.

÷சிக்கலுக்கு காரணம் என்ன? சிக்கலுக்கான காரணம் குறித்து சி.டபிள்யு.டி.எல். உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

÷சென்னை கடல் பகுதியில் கடல் சீற்றமும், சுழலும் அதிக அளவில் காணப்படுகிறது. ஓராண்டில் 45 நாள்கள் மட்டுமே சாதகமான சூழ்நிலை காணப்படும்.

÷இந்த 45 நாள்களிலும் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டுமே கடலுக்கு அடியில் பைப்புகளை பொருத்த முடியும். இதைத் தவறவிட்டால், அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

÷இந்த காரணத்தால் கடல் நீரை ஆலைக்குள் செலுத்தும் குழாய் மற்றும் கழிவு நீரை வெளியேற்றும் குழாய்களை, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் தாமதத்துக்கு இதுதான் காரணம்.

÷கடந்த ஜனவரி, பிப்ரவரியில்தான் கடலுக்கு அடியில் சாதகமான சூழ்நிலை நிலவியது. ÷ஆலைக்குள் ஒருசில இணைப்புகள் கொடுக்கும் பணிகள் மட்டுமே இப்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

÷மார்ச் இறுதியில் அமல்: எனவே மார்ச் இரண்டாவது வாரத்திலேயே சோதனை ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் திட்டம் முழு அளவில் அமலுக்கு வரும் என்றார்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:33