ரூ.1,033 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

Wednesday, 06 January 2010 06:10 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமலர் 06.01.2010

ரூ.1,033 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னை : ""சென்னை, நெம்மேலியில் 1,033 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வரும் 2012ம் ஆண்டு முடியும்,'' என்று, "வி..டெக் லபாக்' நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ்மிட்டல், சென்னையில் நேற்று தெரிவித்தார். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசிடம் ஒப்பந்தம் பெற்றுள்ள, "வி..டெக் லபாக்' நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ்மிட்டல், இத் திட்டம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 1,033 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இத் திட்டப் பணிகள் வரும் 2012ம் ஆண் டிற் குள்ளாக முடிக்கப்பட்டு, செயல்படுத்தப் படும். இத்திட்டத்தில் கடல் நீர் சவ்வூடு பரவுதல் தொழில் நுட்பத்துடன் கூடிய உலகத் தரமான திட்டத்தை அமைக்க உள்ளோம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்ட முயற்சிகளில் இணைந்து, குறைந்த செலவில் மாற்று நீராதாரங்களை உருவாக்குவதிலும் உறுதி பூண்டுள் ளோம். இத்திட்டம், அதிநவீன டிஸ்க் பில்டர்கள், அல்ட்ராபில்ட்ரேஷன் மெம்ப்ரேன்கள், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மெம்ப்ரேன்களைக் பயன்படுத்தி அமைக்கப்படும். இந்தியாவில் முதன்முறையாக தற்போது தான் டிஸ்க் பில்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, திட்டத்தை விரைவாக நிறுவவும், செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், செலவையும், நேரத்தையும் குறைக்கவும் உதவும். இதன் மூலம், சுத்திகரிப்பில் முந்தைய நிலையில் ரசாயனப் பயன்பாட்டை தவிர்க்க வோ அல்லது பெருமளவு குறைக்கவோ இயலும். இவ்வாறு ராஜிவ் மிட்டல் கூறினார்.

Last Updated on Wednesday, 06 January 2010 06:12