பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர்

Tuesday, 04 June 2013 07:17 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print
தினமணி        04.06.2013

பூங்காக்களுக்கு சமையலறை கழிவு நீர்


சமையலறை கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதை அந்தந்த காலனி பூங்காக்களின் பராமரிப்புப்புக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை முதல்வர் ஷீலா தீட்சித் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

வசந்த் குஞ்ச், பாக்கெட் சி-9 காலனியில் இத்திட்டத்தை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

மாநில அரசின் "தில்லி பார்க்ஸ் அண்ட் கிரீன் சொûஸட்டி' ஆதரவுடன் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி குடியிருப்பு நலச் சங்கம் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது.

மழைநீரைச் சேமித்து அதை பூங்காங்களுக்குப் பயன்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வேகமாக குறைந்துவரும் சூழலில் இது போன்ற திட்டங்கள் நிலத்தடி நீரை தக்க வைப்பதுடன், மழைநீரைச் சேமிக்கவும் உதவிடும்.

தில்லியில் உள்ள அனைத்து காலனிகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த குடியிருப்போர் சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஷீலா தீட்சித் பேசினார்.

நிகழ்ச்சியில் தில்லி சட்டப் பேரவைத் தலைவர் யோகானந்த் சாஸ்திரி, ரமேஷ் குமார் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.