மார்த்தாண்டத்தில் அக்.16ல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

Thursday, 14 October 2010 06:02 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன் 14.10.2010

மார்த்தாண்டத்தில் அக்.16ல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

மார்த்தாண்டம் அக்.14: குழித் துறை நகராட்சி பகுதி மக்களுக்கு ஞாறான்விளையில் அமைக்கப் பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் இரு ந்து குடிநீர் விநியோகிக்க பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் இருந்து பம்ப் செய்யப்படும் தண் ணீர், நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ 1 கோடியே 19 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஞாறான்விளையில் அமைக்கப் பட்டது. தற்போது பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா வரும் 16 ம் தேதி நடக்கிறது.

விழாவுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகிக்கிறார். ஹெலன்டேவிட்சன் எம்பி, ஜாண் ஜோசப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நகராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி வரவேற்று பேசுகிறார்.அமைச்சர் சுரேஷ்ராஜன் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பேசுகிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மோகன் திட்ட விளக்கவுரை ஆற்றுகிறார். விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.