தாம்பரம் பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

Thursday, 07 November 2013 10:26 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினபூமி           07.11.2013

தாம்பரம் பேருந்து நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-Inagurate-Thambaram-Bus-Terminal(C).jpg 

சென்னை, நவ.7 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று(6.11.2013) தலைமைச் செயலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் நகராட்சியில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 

மேலும், பல்வேறு நகராட்சிகளில் 151 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்கள். இவையன்றி, தூத்துக்குடி மாநகராட்சியில் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 

இந்தியாவிலேயே விரைந்து நகர்மயம் ஆகி வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நகரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் வலு சேர்க்கும் இயந்திரங்கள் ஆகும்.  அதே நேரத்தில், நகர்ப்புரங்களில் மக்கள் தொகை பெருகிவருவதன் காரணமாக, அடிப்படை வசதிகளின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் நகராட்சியில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; கோயம்புத்தூர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தில் 75 லட்சம் பொய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதி கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம்; தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச் சந்தை கட்டடம்; என மொத்தம் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். 

மேலும், பெரம்பலூர் நகராட்சியில் 31 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் இராமநாதபுரம் நகராட்சியில் 31 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் 14 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திண்டுக்கல் நகராட்சியில் 46 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தருமபுரி நகராட்சியில் 

24 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள், என மொத்தம் 148 கோடியே 14 லட்சம் பொய் மதிப்பீட்டிலான புதிய பாதாள சாக்கடை திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 282 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள்  மற்றும் கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக அளித்திடும் வகையில் 60 கோடி பொய் மதிப்பீட்டில், வடிவமைத்து கட்டி பராமரித்து மாற்றுதல் (ஈடீஙூடுகிடூடீக்ஷ ஆசீடுங்சி ஊடுடூஹடூஷடீ ஞஙீடீஙுஹசிடீ ஹடூக்ஷ பஙுஹடூஙூக்டீஙு - ஈஆஊஞப) முறையில் 24 எம்எல்டி கொள்ளளவு திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.