தாம்பரத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம்

Thursday, 07 November 2013 08:43 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி            07.11.2013

தாம்பரத்தில் ரூ.5 கோடியில் புதிய பஸ் நிலையம்

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

தென் தமிழகத்தின் நுழைவாயிலாக திகழும் தாம்பரத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

அவ்வாறு வரும் பஸ்களை நிறுத்துவதற்கு ஏற்ப அங்கு போதிய வசதிகள் கொண்ட பஸ் நிலையம் இல்லை. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது தாம்பரம் சானடோரியத்தில் 3.77 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்னை மாநகருக்குள் செல்லும் அனைத்து மாநகர பஸ்களும் இந்த புதிய பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது.

இதனால் சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் பஸ்ஸþக்காக காத்திருக்கும் பொதுமக்களின் கூட்டம் பெருமளவு குறையும்.

மேலும் புதிய பஸ்நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் (தடம் எண் 79) வேலூர் (தடம் எண் 155) ஆரணி(தடம் எண் 279) சித்தூர்(தடம் எண் 168) பெங்களூர் (தடம் எண் 144)ஆகிய இடங்களுக்கு காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பஸ்கள் புறப்பட்டுச் செல்லும்.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் (தடம் எண் 583), பேரம்பாக்கம் (தடம் எண் 583-டி), போந்தூர் (தடம் எண் 583-பி), எழிச்சூர் (தடம் எண் 55-பி), குருவன்மேடு (தடம் எண் 55-எம்), ஸ்ரீபெரும்புதூர் (தடம் எண் 55-என்), வல்லக்கோட்டை (தடம் எண் 55-எல்,55-ஏ), வாலாஜாபாத் (தடம் எண் 579-ஏ) ஆகிய இடங்களுக்கும் சுமார் 106 வழித்தடங்கள் செயல்படும். பஸ்நிலையத்தினுள் பொதுமக்கள் வசதிக்காக உணவகம், பயணிகள் தங்கும் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் புதிய பஸ் நிலைய திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரன், தாமஸ் மலை ஒன்றியத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன், பொறியாளர் சீனிவாசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.