சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

Saturday, 13 May 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தி இந்து        13.05.2017

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 88.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் 32 மேல்நிலைப் பள்ளி களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் படித்த 6,423 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 2,580 பேர் மாணவர்கள், 3,843 பேர் மாணவிகள். தேர் வெழுதிய 6,423 பேரில் 5700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.7 சதவீதமாகும். கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி 86.21 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களில் 2,085 பேர் மாணவர்கள், 3,615 பேர் மாணவிகள். தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி வகிதம் 80.8 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.1 சதவீதமாக இருக்கிறது.

தேர்ச்சி பெற்றவர்களில் 136 மாணவ, மாணவியர் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 61 பேர் மட்டுமே 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். மேலும் 524 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள னர். கடந்த ஆண்டு இது 326-ஆக இருந் தது. கடந்த ஆண்டை விட முழு (200-க்கு 200) மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பெரம்பூர் மார்க் கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஐடி நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3-ஆக இருந்தது. அதேபோல இந்தாண்டு 18 பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.