"ஆசிரியர்களின் முயற்சியால் நகராட்சி பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம்'

Friday, 27 September 2013 08:46 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி             27.09.2013

"ஆசிரியர்களின் முயற்சியால் நகராட்சி பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம்'

ஆசிரியர்களின் முயற்சியால் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் நகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் கூறினார்.

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளிகள் சார்பில் ஆசிரியர் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் க.மு.ந.சகோரர்கள் நகராட்சிப் பள்ளியின் பெற்றோர்  -ஆசிரியர் கழகத் தலைவர் ஸ்ரீஃபன் சர்குனர் வரவேற்றார்.

க.மு.ந.சகோதரர்கள் கந்தசாமி, கதில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சம்மந்தம் கருத்துரை வழங்கினார்.

விழாவுக்கு தலைமை வகித்து திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் பேசியது:

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் சிற்பாக பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளியில் படித்த பல மாணவர்கள், நல்ல நிலையில் உள்ளனர். அதற்கு காரணம் சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்கள்தான்.

கடந்த பொதுத்தேர்வுகளில் நகராச்சிப் பள்ளி மாணவர்கள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்ச்சி விகிதம் திருவள்ளூரில் உள்ள பல தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிகம் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.