நகராட்சி பள்ளியில் கலைப் பாடப்பிரிவு தொடக்கம்

Friday, 02 August 2013 11:48 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி              02.08.2013

நகராட்சி பள்ளியில் கலைப் பாடப்பிரிவு தொடக்கம்

திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக பிளஸ் 1 வகுப்பில் கலைப்பாடப் பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி தெருவில் இயங்கி வந்த நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்டது முதல், இப்பள்ளியில் முதல் குரூப்பில் உயிரியல் பிரிவும், இரண்டாவது குரூப்பில் கணினி அறிவியல் பிரிவு மற்றும் "பியூர் சயின்ஸ்' ஆகிய பாடப்பிரிவுகள் இருந்தன.

இந்நிலையில், இப்பள்ளியில் வியாழக்கிழமை முதல் கலைப்பாடப் பிரிவு (4-வது குரூப்) புதிதாக தொடங்கப்பட்டது. இப்பிரிவில் வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் அடங்கும்.

இப்பிரிவில் இதுவரை 22 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

கலைப்பாடப் பிரிவு தொடக்கநாளையொட்டி, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் ஏ.பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன சுந்தரி ஆகியோர் மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.

மேலும் இப்பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஜாமன்டரி பாக்ஸ், காலணி ஆகியவையும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எழிலரசன், வீட்டு வசதி கூட்டுறவுச் சங்க இயக்குநர் விஜயன், ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.