சென்னை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 955 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மேயர் வழங்கினார்

Monday, 08 July 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print
தினத்தந்தி               08.07.2013

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 955 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மேயர் வழங்கினார்


சென்னை மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 955 மாணவியர்களுக்கும் இலவச மடிக்கணினிகளை மேயர் சைதை துரைசாமி நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மட்டும் விலையில்லா மடிக்கணினியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வருகிறார். அவரது உத்தரவின்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தும் வகையில் 27 வகையான சலுகைகள் பின்தங்கிய மாணவ–மாணவிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தான், விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் படிக்கின்ற மாணவர்களுக்கு விடுதியுடன் கூடிய பயிற்சி மையம் அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் வி.நீலகண்டன், துணை மேயர் பா.பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.