194 பள்ளிகளுக்கு எஸ்எஸ்ஏ ரூ.30.45 லட்சம் மானியம்

Tuesday, 28 July 2009 06:07 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 28.07.2009

194 பள்ளிகளுக்கு எஸ்எஸ்ஏ ரூ.30.45 லட்சம் மானியம்

திருப்பூர், ஜூலை 27: அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) சார்பில் திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 194 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நகராட்சிப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.30.45 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கேஎஸ்சி அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மானியம் பெற 94 தொடக்கப் பள்ளிகள், 79 நடுநிலைப் பள்ளிகள், 8 உயர் நிலைப் பள்ளிகள், 13 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. பள்ளி மானியமாக தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டன.

பராமரிப்பு மானியமாக 3 வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம், 3 வகுப்பறைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டன. அதன்படி, பள்ளி மானியமாக ரூ.15.65 லட்சமும், பராமரிப்பு மானியமாக ரூ.14.80 லட்சமும் வழங்கப்பட்டன.

மானியத் தொகைகளை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் தேவராஜன், அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.லோகநாயகி, கேஎஸ்சி பள்ளி தலைமையாசிரியர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்