தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பை மேம்படுத்த சட்ட மசோதாவை துணை முதல்வர் தாக்கல் செய்தார்

Monday, 20 July 2009 13:10 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

மாலை மலர் 20.07.2009

தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பை மேம்படுத்த சட்ட மசோதா: மு..ஸ்டாலின் தாக்கல் செய்தார்

சென்னை, ஜூலை. 20-

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வை விதிப்பது மற்றும் வசூலிப்பது குறித்த சட்ட முன் வடிவை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

மாநிலத்தில் உள்ள நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1000 கோடி என்ற அளவிற்கு மதிப்பிடப்பட்ட தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு செலுத்ததக்க தாக ஒதுக் கப்பட்ட முத்திரை தீர்வை மீதான மேல் வருவாயின் ஒரு பகுதியாக கொண்டிருக்கும். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு நகராட்சி பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வையை முத்திரை தீர்வையின் மீதான மேல் வரி என்ற முறையில் விதிக்கவும், வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு வசூல் செய்யப்படும் தொகையில் 100க்கு 50 சதவீதம் என்ற அளவிலான நிதியை நகராட்சி அல்லது மாநகராட்சி எதிலும் திட்டவட்டமான கட்டமைப்பு திட்டம், அமைப்பு திட்டம், செயல் முறை திட்டம் அல்லது திட்டத்தை செயல்டுபடுத்துவதற்கான தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு நிதியில் வரவு வைக்க வகை செய்யும் தனி சட்டம் ஒன்று இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் தொழில் நடைமுறையை எளிதாக்கும் சட்ட முன் வடிவையும் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தொழில் மேம்பாட்டை ஊக்கப்படுத்தவும், புதிய முதலீடுகள் செய்வதை எளிதாக்குவதற்கும் நடை முறை தேவைப்பாடுகளை குறைப்பதன் மூலம் மாநிலத்தில் முதலீட்டா ளர்களுக்கு நட்போடு கூடிய சூழலுக்கு வகை செய்வதெனவும் தேவையான தாக கருதப்படுகிறது. அதற்கேற்ற வகையில் பின்வரும் நோக்கங்களுக்காக தனி சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில் அமைப்பு திட்டங்களை செயல் முறையில் நிறுவ தேவைப் படக் கூடிய தடை இல்லை எனபதற்கான பல்வேறு அனுமதிகளை விரைவாக வழங்க 2 அதிகார அமைப்புகளை உருவாக்குவது அதில் ஒன்று மாநில அளவிலும் மற்றொன்று மாவட்ட அளவிலம் அமையும்.

அதிகார அமைப்புக்கு விண்ணப்ப த்தை அனுப்புகிற நேரத்தில் தற்சான்றிழை தொழில் முனைவர்களே கொடுப்பதன் மூலம் பணியை எளிதாக்குதல். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.