160 சாலைகளில் பள்ளம்: செங்கல் தூள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்

Monday, 09 November 2009 09:18 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி 9.11.2009

160 சாலைகளில் பள்ளம்: செங்கல் தூள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்

சென்னை, நவ.8: சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக்கு 160 சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களை செங்கல் தூள்கள் கொண்டு நிரப்பும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக்கு 160 சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகியுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஆர்க்காடு சாலை, எல்.பி. சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, டிடிகே சாலை, ஜி.என். செட்டி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இந்தப் பள்ளங்களை செங்கல் தூள்கள் போட்டு நிரப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை நின்றதும் தார் போட்டு மூடும் பணி மேற்கொள்ளப்படும்.

35 ஆயிரம் பேருக்கு குளோரின் மாத்திரைகள்: மழைக்கால நோய்களைத் தடுப்பதற்காக வியாசர்பாடி, கணேசபுரம், பெரம்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 24சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. இதில் 3,437 பேர் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 35,533 பேருக்கு, குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

154 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 124 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மூலம், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 09 November 2009 09:21