தஞ்சை நகர்பகுதியில் ரூ.14லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

Thursday, 30 January 2014 11:26 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்                30.01.2014 

தஞ்சை நகர்பகுதியில் ரூ.14லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

தஞ்சை, : தஞ்சை நகராட்சி பகுதியில் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.14.21 கோடி செலவில் தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டது.

தஞ்சை நகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதை தார் சாலைகளாக மாற்ற நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.14.21 கோடி மதிப்பில் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 37வது வார்டுக்குட்பட்ட விக்டோரியா நகர் ஆதி சேசன் தெருவில் நகராட்சி தலைவர் சாவித்திரி கோபால் பூமி பூஜையுடன் சாலை பணிகளை தொடங்கி வைத் தார். அப்போது அவர் கூறும்போது, தஞ்சை நகராட்சியில் 51 வார்டுகளில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் தற்போது 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தார் சாலைகளாக போடப்படுகிறது. அதன்படி 6840 மீட்டர் நீளத்திற்கு ரூ.2.72 கோடி மதிப்பில் ஒரு பிரிவாகவும், 8240 மீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பிலும், 11920 மீட்டர் நீளத்திற்கு ரூ.4.26 கோடி மதிப்பிலும், 10190 மீட் டர் நீளத்திற்கு ரூ.4.23 கோடி மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.