திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

Thursday, 23 January 2014 11:57 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி             23.01.2014 

திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைப் பகுதிகளில் பேவர்கல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி மற்றும் துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் கூறினார்கள்.

  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற சாலைமேம்பாட்டு  திட்டத்தின்கீழ், நகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சிமிண்ட் பேவர்கல் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து, இந்தத் தொகையை, அரசு மானியமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு. திட்ட பிரேரணை தயார் செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வார்டு எண் 1,9 மற்றும் 12ல் உள்ள அண்ணா காலனி குறுக்குத் தெருக்கள், இந்திரா நகர், கண்ணகி காலனி, பழனிச்சாமி வீதியிலும், வார்டு 2,7, மற்றும் 16ல் சுப்பிரமணியர் கோவில் குறுக்குத் தெரு, ராதாகிருஷ்ணன் காலனி, அய்யாச்சாமி பிள்ளை சந்து, மாட்டுமந்தை வீதி ஆகியவற்றிலும், வார்டு 3,11 மற்றும் 13ல் உள்ள பசும்பொன் நகர் குறுக்குத்தெரு, பாண்டியன் நகர் குறுக்குத்தெரு, 32 வீட்டு காலனி குறுக்குத்தெரு, முனீஸ்வரன்நகர், கே.கே.நகர் பகுதியிலும், வார்டு 10,14 மற்றும் 17ல் உள்ள தெருக்களான அழகன்சந்து, வையன் வீதி, எஸ்.என். புரம் சாலைகுறுக்குத் தெரு பகுதியிலும், வார்டு 19,20 மற்றும் 21 ஆகியவற்றில் உள்ள தெருக்களான போடிநாயக்கர் குறுக்குத்தெரு, ஆசாரிமார் நந்தவன குறுக்குத்தெரு, மேலமாடவீதி, சுக்கிரவார்பட்டி குறுக்குத்தெரு பகுதிகளிலும், வார்டு 15, 18 ல் உள்ள தெருக்களான நாடார் பிள்ளையார் கோவில் தெரு, சுக்கிரவார்பட்டி சாலைகுறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பேவர் கல் சாலை அமைக்கப்படும்.