ராயகிரி பேரூராட்சி குளங்கள் ரூ. 5.23 லட்சத்துக்கு ஏலம்

Thursday, 19 November 2009 08:41 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமணி 19.11.2009

ராயகிரி பேரூராட்சி குளங்கள் ரூ. 5.23 லட்சத்துக்கு ஏலம்

சிவகிரி, நவ. 18: ராயகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 7 குளங்களின் மீன்பாசி குத்தகை மொத்தம் ரூ. 5.23 லட்சத்துக்கு ஏலம்போனது.

இப் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜசிங்கப்பேரி, மேலப்பன்னத்திகுளம், கீழப்பன்னத்கிகுளம், முத்தூர்குளம், கடம்பன்குளம், வேப்பங்குளம், மேலக்கரிசல்குளம் ஆகிய 7 குளங்களின் மீன்பாசி குத்தகை ஏலம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ப.சு. வேலாயுதம் தலைமையிலும், துணைத் தலைவர் பாலகணேசன், செயல் அலுவலர் பி. ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்றது.

7 குளங்களும் சேர்ந்து மொத்தம் ரூ. 5.23 லட்சத்துக்கு ஏலம்போனது. அதில் அதிகபட்சமாக ராஜசிங்கப்பேரி குளம் ரூ. 3.75 லட்சத்துக்கு ஏலம்போனது.

Last Updated on Thursday, 19 November 2009 08:42