குடிநீர் திட்ட பணிகளுக்காக வார்டுகளுக்கு தலா ரூ.1 லட்சம்

Thursday, 24 September 2009 06:59 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

னமணி 24.09.2009

குடிநீர் திட்ட பணிகளுக்காக வார்டுகளுக்கு தலா ரூ.1 லட்சம்

கோவை, செப். 23: குடிநீர் திட்டப் பணிகளுக்காக அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி கணக்குக் குழு வலியுறுத்தியுள்ளது.

இக் குழுக் கூட்டம் குழுத் தலைவர் ந.தமிழ்ச்செல்வி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

கூட்டத்துக்கு மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உலக தமிழ் மாநாடு கோவையில் நடைபெறவுள்ளதால் வளர்ச்சிப் பணிகளை உடனடியாக செய்துமுடிக்க வேண்டும்.

மாநகராட்சி வரி வசூல் மையங்கள் இப்போது பிற்பகல் 1 மணிவரை செயல்பட்டு வருகிறது. இதன் வேலைநேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க வேண்டும்.

குடிநீர் விநியோக திட்டப் பணிகளுக்காக அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் ஒதுக்க வேண்டும்.

கோவையை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழு உறுப்பினர்கள் ஹேமலதா (20-வது வார்டு), கலையரசி (21-வது வார்டு), சேரலாதன் (14-வது வார்டு), குடிநீர் கணக்கு அலுவலர் என்.துரை, ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்ட நிர்வாக அலுவலர் என்.சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 24 September 2009 07:01