அன்னூர் பேரூராட்சி கடைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

Friday, 17 August 2012 11:11 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினகரன்              17.08.2012

அன்னூர் பேரூராட்சி கடைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

அன்னூர், : அன்னூர் பேருராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 20லட்சம் செலவில் கடந்த 2010ஆம் ஆண்டு துவங்கிய பணி தற்போது முடிவடைந்து அன்னூர் பேருராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

கீழ் தளத்தில் 5 கடைகளும், மேல் தளத்தில் 5 கடைகளும் ஏலம் விடப்பட்டது. கீழ் தளத்தில் உள்ள கடைகளின் வாடகை ரூ.25,000 முதல் ரூ.41,500. மேல் தள கடைகளின் வாடகை ரூ.10,000 முதல் 11,200 வரை அதிகரித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிருந்த கடைகளின் ரூ.1035 முதல் ரூ.3460.  மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ரூ.3500 முதல் ரூ.14000 வரை ஏலம் போனது.

ஏலத்திற்கு அவினாசி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து 106 பேர் பங்கு பெற்றனர். பத்து பேர் ஏலம் எடுத்துள்ளனர். ஏலம் எடுத்த டேவணி தொகை 1 நபருக்கு ரூ.50ஆயிரம்  வீதம் மொத்தம் ரூ.5லட்சம் பெறப்பட்டது. மேலும் நபருக்கு ரூ.21800 வீதம் 16 மாதத்திற்கு ரூ.34லட்சத்து 88ஆயிரம்  முன்பணமாக பெறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.39லட்சத்து 88ஆயிரம்  பெறப்பட்டுள்ளது. அன்னூரில் இதுவரை நடந்த ஏலத்தில் இந்த வருடம் அதிக அளவில் ஏலம் விடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. ஏல மேற்பார்வையாளர் சதீஸ் செல்வராஜ் கூறியதாவது: ஏலம் எடுத்த கடைகளை சுத்தமாக, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மாதந்திர தொகையை சரியாக செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். என்றார்.

 இதில் பேரூராட்சி தலைவர் ராணி சௌந்தரராஜன், துணை தலைவர் விஜயகுமார் மற்றும வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி எழுத்தர் செல்வ ராஜ், தலைமை எழுத்தர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 11:12