காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ. 20 லட்சம் மத்திய அரசு மானியம்

Friday, 10 August 2012 11:50 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமணி               10.08.2012

காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ. 20 லட்சம் மத்திய அரசு மானியம்

ஆறுமுகனேரி, ஆக. 9: காயல்பட்டினம் நகராட்சிக்கு மத்திய அரசின் மானியம் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது

÷13-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில், சுமார் ரூ. 2371.22 கோடியை மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி மன்றங்களுக்கு மானியமாக தவணை முறையில் வழங்கவுள்ளது.

÷இத்தொகை இருவகையாக பிரிக்கப்பட்டு, பொது அடிப்படை மானியம் வகையில் ரூ.1550.97 கோடியும், பொது செயல்பாடு மானியம் வகையில் ரூ. 820.25 கோடியும் மத்திய அரசால் வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் பொது அடிப்படை மானியம் 2010-11 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், இரு தவணையாக மாநில அரசால் உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மூன்றாம் ஆண்டின் (2012-13) முதல் தவணை உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, ரூ. 20 லட்சத்து 79 ஆயிரத்து 291 வழங்கப்பட்டுள்ளது.

÷இந்த மத்திய அரசின் மானிய தொகை, உள்ளாட்சி மன்றங்களின் குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டங்களில் உள்ளாட்சி மன்றங்களின் பங்களிப்பு தொகையை வழங்கவும், நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களை கட்டவும், நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை கட்டவும் முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்பட வேண்டும்.÷உள்ளாட்சி மன்றங்களே நிறைவேற்றும் குடிநீர் திட்டங்கள் வகைக்கு இந்த தொகையை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.