மாநகராட்சி கூட்டத்தில் நாளை தீர்மானம்: தொழில் வரி உயர்கிறது- வருடம் 1 1/2 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ. 1520 வரி

Tuesday, 21 July 2009 11:26 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

மாலை மலர் 21.07.2009

மாநகராட்சி கூட்டத்தில் நாளை தீர்மானம்: தொழில் வரி உயர்கிறது- வருடம் 1 1/2 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ. 1520 வரி

சென்னை, ஜூலை.21-

சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் மாதச்சம்பளம் வாங்குபவர் களிடம் 6 மாதங்களுக்கு ஒருமுறை தொழில் வரி வசூ லிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களிடம் இருந்து அரசாங்கமும், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களிடம் இருந்து அந்தந்த நிறுவனங்களும் வரியை வசூலித்து மாநக ராட்சிக்கு கொடுக்கிறது. தொழில் வரியாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. 100 கோடி மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

1998-ம் ஆண்டு தொழில் வரி சட்டம் திருத்தி அமைக் கப்பட்டது. 6 மாதங்களுக்கு ரூ. 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழில் வரி கிடையாது.

21 ஆயிரத்துக்கு மேல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 60-ம், ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் 45 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 150-ம், 45 ஆயிரத்துக்கு மேல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 300-ம், 60 ஆயிரத்துக்கு மேல் ரூ. 75 ஆயிரம் வரை சம்ப ளம் வாங்குபவர்களுக்கு ரூ. 450-ம் வரி வசூலிக்கப்பட்டது.

இந்த வரி உயர்வு 5 ஆண் டுக்கு ஒருமுறை உயர்த் தப்பட்டு வருகிறது. அதன்படி 2003க்கு பிறகு இப்போது வரி உயர்த்தப்படுகிறது.

புதிய வரி உயர்வுப்படி 6 மாதங்களுக்கு ரூ. 21 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.

21,001 முதல் 30,000 வரை சம்பளம் வாங்குபவர் களுக்கு ரூ. 100.

ரூ. 30,001 முதல் 45,000 வரை சம்பளம் வாங்கு பவர்களுக்கு ரூ. 235.

ரூ. 45,001 முதல் 60,000 வரை சம்பளம் வாங்குப வர்களுக்கு ரூ. 510.

ரூ. 60,001 முதல் 75,000 வரை சம்பளம் பெறுபவர் களுக்கு ரூ. 760.

ரூ. 75 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு ரூ. 1095.

இந்த புதிய வரி உயர்வு பற்றிய தீர்மானம் நாளை மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றப் படுகிறது.