சொத்துரிமை மாற்றத்தில் முத்திரைத் தீர்வை மீது மேல்வரி

Tuesday, 21 July 2009 05:34 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி 21.07.2009

சொத்துரிமை மாற்றத்தில் முத்திரைத் தீர்வை மீது மேல்வரி

சென்னை, ஜூலை 20: நகராட்சிப் பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வையை, முத்திரைத் தீர்வையின் மீதான மேல்வரி என்ற முறையில் விதிக்க மற்றும் வசூலிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வர் மு.. ஸ்டாலின் இது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

மாநிலத்தில் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் ஆண்டொன்றுக்கு ரூ. 1,000 கோடி என்ற அளவுக்கு மதிப்பிடப்பட்ட "தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தை' செயல்படுத்த அரசு முடிவு செய்தது.

இந்த திட்டம் நகராட்சிகள், மாநகராட்சிகளுக்குச் செலுத்தத்தக்கதாக ஒதுக்கி அளிக்கப்பட்ட முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியின் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை கொண்டிருக்கும். இதற்காக, நகராட்சிப் பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வையை, முத்திரைத் தீர்வையின் மீதான மேல்வரி என்ற முறையில் விதிக்கவும், வசூலிக்க வகை செய்யப்படும்.

அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையில் 50 சதவீதம் அளவிலான நிதியை, அந்த குறிப்பிட்ட நகராட்சி அல்லது மாநகராட்சியின் பகுதியில் சாலை கட்டமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்பு நிதியில் வரவு வைப்பதற்கு வகை செய்யும் தனிச்சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.