திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

Thursday, 09 January 2014 08:31 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினத்தந்தி               09.01.2014

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

திருப்பூர் மாநகராட்சியில் வரிவசூலை 100 சதவீதம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர் உத்தர விட்டார்.

வரிவிதிப்பு

திருப்பூர் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி அலு வலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திர சேகர் தலைமை தாங்கி னார். உதவிஆணையர் (கணக்கு) விஜயகுமார் முன்னிலை வகித் தார். உறுப்பினர்கள் கீதா ஆறுமுகம், நஜ்முதீன், உதவி ஆணையர் வாசுக்குமார், செல்வநாயகம், வருவாய் ஆய் வாளர்கள், சுகாதார ஆய் வாளர்கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் உறுப்பினர் கீதா ஆறுமுகம் பேசும்போது, ‘‘சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை வரி விதிக்கவில்லை. அங்கு குடிநீர் இணைப்பு உள்பட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள ஆக்கிர மிப்பு கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்துவ தில்லை’’ என்றார்.

செல்போன் கோபுரங்கள்

உறுப்பினர் நஜ்முதீன் பேசும் போது, ‘‘பூலவாரி சுகுமார் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடு களுக்கு வரி விதித்து, அவர் களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இது போல் பெரியகடைவீதியில் பலர் தொழில்வரி செலுத்தா மல் தொழில்நடத்தி வருகிறார் கள். அங்கு வரிகளை உரிய முறையில் வசூல் செய்ய வேண்டும். செல்போன் கோபு ரங்கள் நகரில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு உரிய வரி விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து தலை வர் ஆர்.சந்திரசேகர் பேசும் போது கூறியதாவது:–

வரி வசூலை பொருத்து தான் மாநகராட்சியின் நிர் வாகத்தை பெருக்க முடியும். மாநகராட்சியில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. வருகிற ஏப்ரல் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு முன்பாக வரிவசூலை செய்து முடிக்க வேண்டும் என்று மேயரும், துணைமேயரும் கூறி உள்ளனர்.

100 சதவீதம் வரிவசூல்

எனவே 100 சதவீதம் வரி வசூலை மார்ச் மாத இறு திக்குள் செய்து முடிக்க வேண் டும். மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் தான் இதற்கு முழு முயற்சி எடுக்க வேண் டும். நீண்ட நாட்களாக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பை பார பட்சம் இன்றி துண்டிக்க வேண்டும்.

அதுபோல் தொழிலாளர் கள் நிறைந்துள்ள திருப்பூரில் தொழில்வரி மிகவும் குறை வாக உள்ளது. 3,355 பேருக்கு மட்டும் தான் புதிதாக தொழில்வரி விதிக்கப்பட்டு உள்ளது. டி.எல்.ஓ. எனப்படும் அபாயகரமான தொழிற் சாலைகளுக்கான உரிமம் அதிகரிக்கப்பட வேண் டும்.

வாகன காப்பகங்கள்

இதுதவிர மாநகரில் 75 சதவீத நிறுவனங்கள் உரிமம் இன்றி இயங்கி வருகிறது. இதுபோல் வாகன காப்பகங் கள், செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு நிலவரி மட்டுமே செலுத்து கிறார்கள். எனவே இவற்றுக்கு தனி வரி விதிக்க வேண்டும்.

புதிதாக குடிநீர் இணைப்பு கொடுத்து அனைவருக்கும் முறையாக அட்டை வழங்கி, குடிநீர் கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் குடிசைமாற்று வாரிய பகுதி களில் வீடுகட்டி வசிப்பவர் களுக்கும், சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கும் உடனே வரி வதிக்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் சந்திரசேகர் பேசினார்.