கொசு ஒழிப்புக்கு ஒத்துழைக்காத 25 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ்

Thursday, 11 September 2014 09:27 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print
தினமணி       11.09.2014

கொசு ஒழிப்புக்கு ஒத்துழைக்காத 25 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ்

கொசுக்களை ஒழிக்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காத 25 ஆயிரம் வீடுகள், அலுவலகங்களுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் (டிடிசி) அலுவலகங்களும் அடங்கும்.

இதுகுறித்து வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வடக்கு தில்லி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணியைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்துக்கு வீடுகள், அலுவலகங்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கண்டறியப்பட்டது. இவற்றில் 25,579 வீடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல், பஞ்சாப் சிந்த் வங்கி, ஷாதிப்பூர் டிடிசி பேருந்து டிப்போ, டிடிஏ அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.