திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு

Monday, 08 September 2014 09:45 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினகரன்     08.09.2014

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு


திருச்சி, :  திருச்சி மாநகராட்சி பகுதியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்ப டும் என ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார். சமூக முன்னேற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பான ‘இலக்கு’ சார் பில், கண்தானம் தொடர் பான புதிய இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் துவக்கவிழா திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, இணையதளம் மற்றும் ஹெல்ப் லைனை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:

திருச்சி மாநகராட்சி பகுதியில் 3 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். 90 சதவீதம் பேர் கழிப்பிட வசதியை பயன்படுத்தி வருகின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் 13 இடங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மாநகராட்சி சார்பில் ‘நம்ம கழிப்பறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகு தியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும்போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட குப் பைகளை வீடுகளிலேயே சேமித்து மாநகராட்சி சார் பில் வீடு வீடாக சென்று பெற்று கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. அதிகளவு குப்பைகளை தருபவர்க ளுக்கு அதற்கேற்ப தொகை வழங்கப்படும் என்றார்.