தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

Monday, 17 February 2014 08:39 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி            17.02.2014

தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

தருமபுரியில் ரூ. 35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி சார்பில் பளுப்புக்குட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை முறையாகப் பராமரிக்காததால், முள்புதர்கள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது.

பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பூங்காவைப் புதுப்பிக்க நகராட்சி சார்பில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், கண்ணைக் கவரும் வகையில் செயற்கை நீருற்றுகள், புல்தரைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டன.

நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பூங்காவைத் திறந்துவைத்தார்.

பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.