மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

Friday, 29 November 2013 10:25 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினகரன்             29.11.2013

மீண்டும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற புதுப்பொலிவு பெறும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்

மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் புகை, ஒலி மாசை தடுக்கும் வகையில் புது வகை செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீண்டும் ஐஎஸ்ஓ தரம் பெறுவதற்காக புதுப் பொலிவு பெற்றுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு அன்றாடம் 725 வெளியூர் அரசு பஸ்கள், 140 தனியார் பஸ்கள், 160 சிட்டி பஸ்கள், 26 மினி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 40 முறை வந்து செல்கின்றன. இதனால் 24 மணி நேரமும் புகை வெளி யேறி நச்சுத் தன்மையும், ஒலி மாசும் அதிகரித்து வருகிறது.

இதனை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும் இயல்புகொண்ட பலவகை பூஞ்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் புதிதாக நடப்பட்டுள்ளன. சிட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் மத்தியில் உள்ள பூங்காவானது செயற்கை நீருற்று, புல் வெளி, புள்ளிமான் உருவம், மின் விளக்கு அலங்காரத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரளி, மகிழம் பூ, செண்பகம், பிளேம் ஆப் தி பாரஸ்ட், மஞ்சள் கொன்னை, காதித பூ, நந்தியா வட்டு, அடுப்பு மல்லி, மரம் வல்லி போன்ற பூக்கும் செடிகள் குவிந்துள்ளன. வெப்பத்தை தணிக்கும் வேம்பு, புங்கன், இலுப்பை போன்ற மரக்கன்று வகைகள் உள்பட 6 ஆயிரத்து 500 செடி, மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. பசுமையான புல் தரைகள், வன விலங்கு, பறவை உருவங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இது அழகிய தோற் றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த பணிகளை மாநகராட்சி சார்பில் செய்து முடித்துள்ள வனத்துறை ஓய்வு பெற்ற ரேஞ்சர் ராஜகோபால் கூறும்போது, “வனத்துறையில் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையிலான எனது யோச னையை மேயர் ராஜன்செல்லப்பா ஏற்று அனுமதி அளித்தார். அதன்படி பஸ் ஸ்டாண்டில் புகை, ஒலி மாசுவை கிரகித்து ஆக்சி ஜன் வெளியிடும் செடி, மரங்கள், புல் வெளிகள் அமைத்து இயற்கை சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் செடிகள், புல் தரை கள் அமைக்கப்படும். அழ கிய தோற்றம் காணப்படும்போது, அதில் சிறு நீர் கழிப்பதை தவிர்க்க வாய் ப்பு ஏற்படும். துர் நாற்றம் வீசாமல் தடுக்க முடியும். பராமரிப்புக்காக தனியாக ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்“ என்றார்.

மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் 1999ல் திறக்கப்பட்டது. 2007ல் ஐஎஸ்ஓ தரம் பெற்றது. அதன் காலம் முடிந்து இடைக்காலத்தில் சீர்குலைவு ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஐஎஸ்ஓ தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் புகை, ஒலி மாசு தடுப்பு முக்கிய இடம் பெறுகிறது. இதனை ஐஎஸ்ஓ தரச் சான்று குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. பஸ் ஸ்டாண்ட்டின் முன் ஆட்டோ, டாக்சிகளுக்கு டைல்ஸ் தளத்துடன் தனி இடம், அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ முன் பதிவு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்படவில்லை. குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்டோ டிரைவர் கள் ஏற்றுக்கொண்ட கட்டணம் “டிஸ்பிளே“ செய்யப்படும் என்றார்கள். அதையும் காணோம். ஆட்டோ கட்டணத்தை ஆர்டிஓ மூலம் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்து, போலீஸ் கமிஷனர் இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆட் டோ முன் பதிவு நிலையம் செயல்பட முடியும்.