சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Saturday, 25 January 2014 07:27 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி             25.01.2014

சிவகாசியில் ரூ 2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசியில் ரூ.2.30 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்தார்.

   நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் கூறியதாவது: ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2013-2014 இன் கீழ் 1.02 கி.மீ. நீளமுள்ள என்.கே.ஆர். பெரியண்ணன் சாலை (விளாம்பட்டிசாலை) சீரமைக்கப்பட்டுள்ளது. தெய்வானை நகரில் 365 மீட்டர் அளவில் தார் சாலையும், ஏ.ஆர். அருணாச்சலம் சாலையும்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.  ஜக்கம்மாள் கோயில் பகுதியிலும், வேலாயுதம் சாலையிலும், ரூ.3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டியும், அப்பகுதிக்கு காமராஜர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து பகிர்மானக் குழாய் பதிக்கவும், மேல்நிலைத் தொட்டி பகுதியில் உள் கட்டமைப்பு செய்யவும், பசும்பொன் சாலையிருந்து, பழனியாண்டவர் புரம் காலனியில் உள்ள மேல்நிலைத் தொட்டிவரை பகிர்மானக் குழாய் பதிக்கவும் ரூ.1.30கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.